Tuesday, March 16, 2010

குடி..... மிருகங்கள்


இடம்:-ஹாஸ்பிடல் :
"அம்மா உங்க ஹஸ்பன்டுக்கு தலையில அடி அப்புறம் கை கால் பல இடங்களில ப்ராக்ச்சர் சிகிச்சைக்கு நெறைய செலவாகும் பரவா இல்லையா"
"எப்படியாவது தேத்திருவேன் டாக்டர் எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க "
" சுமார் ஒரு லட்சம் வரை ஆகும்மா"
சற்று தலை சுற்றியது அப்பெண்மணிக்கு
" சரி டாக்டர் பணத்த கொண்டு வரேன் நீங்க ட்ரீட்மென்ட ஆரம்பிங்க " வெளியே விரைந்தாள்
முதல் நாள்
பார் வெளியே
" டேய் மச்சான் உன் ட்ரீட் பிரமாதம் டா .... சரி வா கிளம்பலாம் உன் வீட்ல நான் டிராப் பன்னிட்டு போறேன்"
"மச்சி நீ பயங்கர போதைல இருக்க, வண்டிய ஒட்டிருவியா "
" டேய் நாங்க எவ்வளவு போதைலயும் ஸ்டெடியா இருப்போம், ஏறு வண்டில"
கார் கிளம்பியது
சற்று நேரத்தில்
டமால்..................................................

இடம்:-ஹாஸ்பிடல்
ஓடி வந்தாள் டாக்டரை நோக்கி" டாக்டர் பணத்த தேத்திட்டேன் இந்தாங்க தையவுசெய்து சிகிச்சை ஆரம்பிங்க "
" சரி கௌன்டர்ல கட்டிடுங்க" சிகிச்சைகளை தொடங்க டாக்டர் உள்ளே உள்ளே விரைந்தார் பெண்மணி
அருகிளிருந்த பெண்மணி கேட்கத்தொடங்கினார்
" எப்படிம்மா பனத்த தேத்தின"
" எல்லாத்தையும் வெச்சு தான் அக்கா தாலி லேர்ந்து பையன் ஸ்கூல் பீஸ் வர கை வெச்சு, ஏதோ அவர் நல்லபடியா வந்தா போதும்" தன கைகளால் கண்களை மூடிக்கொண்டு அழ தொடங்கினாள்
அறுகிளிருந்த சிறுவன் கடவுளை வேண்ட தொடங்கினான் "சாமி நான் ஸ்கூல் போகலனாலும் பரவாயில்ல என் அப்பாவ மட்டும் காப்பாத்திரு " என்று

இடம்-போலீஸ் ஸ்டேஷன்
இரு மிருகங்கள் பேசி கொன்டிருந்தன
"சார் பாருங்க இது ஹிட் அண்ட் ரன் கேஸ் அதுல ட்ரின்க் அண்ட் டிரைவ் வேற நீங்க மோதின ஆள் ஹாஸ்பிடல்ல அடிபட்டு சீரியஸா இருக்கான் இதுல மாட்டினா தண்டனை நஷ்டஈடு எவளவுனு உங்களுக்கே தெரியும் ஏதோ நம்ம எம்.எல்.ஏ சொன்னார்னு தான் இவ்வளவு இறங்கி பேசிட்டிருக்கேன்
" என்ன சார் ... சரி நீங்க கேட்டதையே கொடுத்துடறேன், பார்த்து கொஞ்சம் முடிச்சிவிடுங்க " என்று தன பையில் இருந்த 1 லட்சத்தை நீட்டியது
"ம்ம்ம் ... கவலைய விடுங்க நாங்க பாத்துக்கறோம் ... நிம்மதியா வீட்டுக்கு போங்க"

இடம்-ஹாஸ்பிடல் ....
முதல் மிருகம் அப்பெண்னை நோக்கி விரைந்தது
" அம்மா உங்க ஹஸ்பன்ட மோதின வண்டி நம்பர் எங்களுக்கு இன்னும் கிடைக்கல தேடிட்டிருக்கோம் உங்க ஹஸ்பன்ட கண் முழிச்சதும் சொல்லி அனுப்புங்க"
"சரிங்க" என்றாள் சற்று மனம் நொந்தபடி
"அப்புறம் ..... எப்.ஐ .ஆர் லாம் போட்டிருக்கோம் கொஞ்சம் ...... எங்கள கவனிங்க "
" என்கிட்டே இருக்கறது இந்த ஆயிரம் ருபாய் தானுங்க சார்"
"பரவா இல்லை குடுங்க, "
தன் பையிலிருந்த கடைசி பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.................

3 comments:

Chitra said...

பணம் பாதாளம் வரை பாய்ந்து கொண்டு இருக்கிறது...... நாட்டு நடப்புக்கேத்த பதிவு.

விக்னேஷ்வரி said...

சோகமான அவலம். இது தானே நடக்குது இன்னிக்கு.

Unknown said...

அருமை.... படமாக்கும் கதை....http://shivanthaperumal.blogspot.in/2012/10/blog-post_7.html

Post a Comment