Sunday, March 7, 2010

சிறுகதை-வியாபாரம்




வியாபாரம்

பக்தர்கள் கூட்டம் அலைமோதியது ஒவொருவருக்கும் தனி டிக்கெட் தூரத்தில் இருந்து தரிசிப்பவர்களுக்கு ஒரு டிக்கெட் அருகில் தரிசிப்பவர்களுக்கு ஒரு டிக்கெட்சுவாமிஜி காலை தொடுபவர்களுக்கொரு டிக்கெட்....... ஓடிகொண்டிருந்தது தினம்

இரவு....சுவாமி சுவானந்தா தனி அறையில் தன் சிடனுடன் ஒதுங்கினார்
"இன்னிக்கு எவ்ளோடா கலக்ஷன்"
"ஒரு 70000௦௦௦௦ தொடும் சுவாமி.....".
"ஏண்டா கம்மி ஆகிட்டே இருக்கு நீ ஏதும் கை வெக்கரியா "
"இல்லை சுவாமி.... "
"சரி போய் சரக்கு வாங்கி வா.... அப்டியே ......"
"சுவாமி உங்க விருப்பபடியே செஞ்சுடறேன் சுவாமி, ஒரு சந்தேகம் ..... கேக்கலாமா"
"கேட்டு தொலை"
"சுவாமி ஒரு காலத்தில பேருச்சம் பழம் வித்துடிருந்த நீங்க இன்னிக்கி காவிங்கற வேடமிட்டு பல பெற நம்ப வெச்சு,பொய் அருள்வாக்கு ,உத்தரவாதம் , மோக்ஷம் அது இதுன்னு ஏமாத்தரிங்கலே
.... தப்பு பண்றோம்னு என்னிக்காவது உங்களுக்கு மனசு உருத்திருக்கா சுவாமி?"
"மடையா..... ஒன்னு தெரிஞ்சுக்க இந்த உலகமே ஒரு வியாபார உலகம் அடுத்தவன் நம்பிகைய வெச்சு தான் பிசினஸ் ......,
சோப்பு விக்றவன் இந்த சோப்பு வாங்கினா நீ அழகாகிகுடுவனு சொல்றத நம்பி எத்தன பெண்கள் வாங்குறாங்க .... அத்தனை பெரும் என்ன உலக அழகியாவா ஆகுறாங்க , ஆரோக்கிய சோப்ங்கறாங்க அவங்களுக்கெல்லாம் வியாதியே வர்றதில்லையா,
சினிமா வர்த்தகத்த எடுத்துக்க ...........................................................சினிமா இல்லன்னா உலகமே ஸ்தம்பிசிடும்னு மாய தோற்றத்த ஏற்படுத்தி அது சார்ந்த தொழிலகள பெருக்கிகிட்டே இருக்காங்க ,இவ்வளவு ஏன் சினிமால குத்துப்பட்டு கவர்ச்சி ஏன் வெக்கிரன்னு கேட்டா மக்கள் விரும்பறாங்கனு ஒரு கதை என்ன சர்வே reporta வெச்சிருக்கான் .....மன உறுத்தல் இல்லாத பொய்கள் , ...அரசியல் வர்த்தகமா சொல்லவேண்டியதே இல்லை ..... இப்படி எல்லா வர்த்தக உலகமும் பொய் நம்பிகைகள வெச்சு தான் வியாபாரம் நடத்திடிருக்கு ...... நம்பறவன் பணம் செலவழிகறான், யோசிகிரவன் தப்புறான் ..... அவ்ளோதான் மேட்டர் பிசிநேஸ்ல பாவம் மனசாட்சி எதுவும் கிடையாது பார்த்தா லாபம் கிடைக்காது புரிஞ்சிதா ராசா .....

சீடன் மனதுக்குள் நினைத்துகொண்டான் "இந்த மாதிரி ஆளுங்கள வீடியோ எடுத்தா கூட வீடியோ rights கேட்டு லாபம் பார்ப்பாங்க ...... ஒன்னு கடவுள் இவங்கள தண்டிக்கணும் இல்லை மக்கள் திருந்தனும்,......... சரி சீக்கிரமே நாம ஒரு பிசினஸ் unit ஆசிரமம ஆரம்பிக்கணும், சுய தொழில் லோன் கேட்டு பாங்க்ல apply பண்ணி பார்க்கலாமா?........;...

2 comments:

விக்னேஷ்வரி said...

ரொம்ப ஸ்ட்ராங்கான விஷயத்தை ரொம்ப லைட்டா, அழகா சொல்லிட்டீங்க. நல்லாருக்கு.

manavan said...

Kootam varum varai Samiyar madamum,
Makkal yemarukira varai finance companyum pudhusu pudhusa varum.
Be ware of not only dogs (from the above said culprits too)

Post a Comment