Tuesday, March 16, 2010

குடி..... மிருகங்கள்


இடம்:-ஹாஸ்பிடல் :
"அம்மா உங்க ஹஸ்பன்டுக்கு தலையில அடி அப்புறம் கை கால் பல இடங்களில ப்ராக்ச்சர் சிகிச்சைக்கு நெறைய செலவாகும் பரவா இல்லையா"
"எப்படியாவது தேத்திருவேன் டாக்டர் எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க "
" சுமார் ஒரு லட்சம் வரை ஆகும்மா"
சற்று தலை சுற்றியது அப்பெண்மணிக்கு
" சரி டாக்டர் பணத்த கொண்டு வரேன் நீங்க ட்ரீட்மென்ட ஆரம்பிங்க " வெளியே விரைந்தாள்
முதல் நாள்
பார் வெளியே
" டேய் மச்சான் உன் ட்ரீட் பிரமாதம் டா .... சரி வா கிளம்பலாம் உன் வீட்ல நான் டிராப் பன்னிட்டு போறேன்"
"மச்சி நீ பயங்கர போதைல இருக்க, வண்டிய ஒட்டிருவியா "
" டேய் நாங்க எவ்வளவு போதைலயும் ஸ்டெடியா இருப்போம், ஏறு வண்டில"
கார் கிளம்பியது
சற்று நேரத்தில்
டமால்..................................................

இடம்:-ஹாஸ்பிடல்
ஓடி வந்தாள் டாக்டரை நோக்கி" டாக்டர் பணத்த தேத்திட்டேன் இந்தாங்க தையவுசெய்து சிகிச்சை ஆரம்பிங்க "
" சரி கௌன்டர்ல கட்டிடுங்க" சிகிச்சைகளை தொடங்க டாக்டர் உள்ளே உள்ளே விரைந்தார் பெண்மணி
அருகிளிருந்த பெண்மணி கேட்கத்தொடங்கினார்
" எப்படிம்மா பனத்த தேத்தின"
" எல்லாத்தையும் வெச்சு தான் அக்கா தாலி லேர்ந்து பையன் ஸ்கூல் பீஸ் வர கை வெச்சு, ஏதோ அவர் நல்லபடியா வந்தா போதும்" தன கைகளால் கண்களை மூடிக்கொண்டு அழ தொடங்கினாள்
அறுகிளிருந்த சிறுவன் கடவுளை வேண்ட தொடங்கினான் "சாமி நான் ஸ்கூல் போகலனாலும் பரவாயில்ல என் அப்பாவ மட்டும் காப்பாத்திரு " என்று

இடம்-போலீஸ் ஸ்டேஷன்
இரு மிருகங்கள் பேசி கொன்டிருந்தன
"சார் பாருங்க இது ஹிட் அண்ட் ரன் கேஸ் அதுல ட்ரின்க் அண்ட் டிரைவ் வேற நீங்க மோதின ஆள் ஹாஸ்பிடல்ல அடிபட்டு சீரியஸா இருக்கான் இதுல மாட்டினா தண்டனை நஷ்டஈடு எவளவுனு உங்களுக்கே தெரியும் ஏதோ நம்ம எம்.எல்.ஏ சொன்னார்னு தான் இவ்வளவு இறங்கி பேசிட்டிருக்கேன்
" என்ன சார் ... சரி நீங்க கேட்டதையே கொடுத்துடறேன், பார்த்து கொஞ்சம் முடிச்சிவிடுங்க " என்று தன பையில் இருந்த 1 லட்சத்தை நீட்டியது
"ம்ம்ம் ... கவலைய விடுங்க நாங்க பாத்துக்கறோம் ... நிம்மதியா வீட்டுக்கு போங்க"

இடம்-ஹாஸ்பிடல் ....
முதல் மிருகம் அப்பெண்னை நோக்கி விரைந்தது
" அம்மா உங்க ஹஸ்பன்ட மோதின வண்டி நம்பர் எங்களுக்கு இன்னும் கிடைக்கல தேடிட்டிருக்கோம் உங்க ஹஸ்பன்ட கண் முழிச்சதும் சொல்லி அனுப்புங்க"
"சரிங்க" என்றாள் சற்று மனம் நொந்தபடி
"அப்புறம் ..... எப்.ஐ .ஆர் லாம் போட்டிருக்கோம் கொஞ்சம் ...... எங்கள கவனிங்க "
" என்கிட்டே இருக்கறது இந்த ஆயிரம் ருபாய் தானுங்க சார்"
"பரவா இல்லை குடுங்க, "
தன் பையிலிருந்த கடைசி பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.................

Sunday, March 7, 2010

சிறுகதை-படத்தில் பஞ்ச் நிஜத்தில் டின்ச்

படத்தில் பஞ்ச் நிஜத்தில் டின்ச்


ஷூட்டிங் ஸ்போட்
ஹீரோ பஞ்ச் டயலாக் உதிர்க்க ஆரம்பித்தார்
" மனுஷன் தாண்டா முதல அப்புறம் தான்டா பணம். பணம் செருப்பு மாதிரி காலுக்கு கீழ இருக்கனும் தலைக்கு மேல போகக்கூடாது
புரியுதா ,நாட்டுல சோறு போடற விவசாயி தாண்டா அதிகமா சம்பாதிக்கணும் , இல்லேன்னா அது நாட்டோட வளர்ச்சி இல்லை வீக்கம்"
ஷாட் முடிந்து சேரில் அமர்ந்தார் ஹீரோ
மேனேஜர் ஆரம்பித்தார்" சார் சம்பள பாக்கி பத்தி பேசினேன் அதிகமா இருக்கு கொஞ்சம் குறைச்சுக்க சொல்றார் producer

சேரை தூக்கி எரிந்து எழுந்தார் ஹீரோ "1-கோடிக்கு ஒத்த ரூபா கம்மியானாலும் ஒத்துகமுடியாதுனு சொல்லு நான் கிளம்பறேன் மிச்ச படத்த செட்டில் பன்னப்புரம் முடிச்சிடலாம்னு சொல்லு "
கிளம்பினார் ஹீரோ

சிறுகதை- Tomato Developer

Tomato Developer '2080


ஆண்டு-2080
IT (கணிப்பொறி) அலுவலகம்
சாம் : பட்ஜெட் நியூஸ் பார்த்தியா நிதின் இந்த தடவையும் காய்கறி அரிசி விலை குறையல .... APG(Agriculture producing group) நாடுகள் கிட்ட இருநது import பண்றதால அவங்க நிர்ணயம் பண்ற விலை தானாம்...... என்ன பண்றதுனே புரியல"
நிதின் : " அதுகேன்னபா பண்ணமுடியும் நம்ம நாட்டுல விவாசய நிலம் இல்லையே ..... நம்ம நாட்டு விவசாயத்திற்கு வாய்ப்பு இருக்கானு ரிசர்ச் பண்ண வெளிநாட்டுளிருந்து ரெண்டு கமபெனி வரப்போகுது பார்ப்போம் ...., அது சரி உன் மகன் வேலை தேடிட்டிருந்தானே கிடைச்சுதா ?"
சாம் : "ட்ரை பண்ணிட்டிருகான் கிடைக்கமாட்டேன்குது இப்ப எல்லாம் "Tomato Developer" கு போட்டி ஜாஸ்தி சரி போ பொறுமையா தேடுன்னு விட்டேன் நம்மள மாதிரி கஷ்டபடாம செட்டில் ஆகட்டும் "
நிதின் : "பேசாம ரைஸ் க்ராபிங் படிக்கச் சொல்லு "Rice Development" கு இப்ப டிமான்ட் ஜாஸ்தி என் பையன் கிட்ட வேனும்னா detail கேட்டு சொல்றேன் கோர்ஸ் பீஸ் கூட வெறும் 4 லட்சம் தான் "

சிறுகதை-வியாபாரம்




வியாபாரம்

பக்தர்கள் கூட்டம் அலைமோதியது ஒவொருவருக்கும் தனி டிக்கெட் தூரத்தில் இருந்து தரிசிப்பவர்களுக்கு ஒரு டிக்கெட் அருகில் தரிசிப்பவர்களுக்கு ஒரு டிக்கெட்சுவாமிஜி காலை தொடுபவர்களுக்கொரு டிக்கெட்....... ஓடிகொண்டிருந்தது தினம்

இரவு....சுவாமி சுவானந்தா தனி அறையில் தன் சிடனுடன் ஒதுங்கினார்
"இன்னிக்கு எவ்ளோடா கலக்ஷன்"
"ஒரு 70000௦௦௦௦ தொடும் சுவாமி.....".
"ஏண்டா கம்மி ஆகிட்டே இருக்கு நீ ஏதும் கை வெக்கரியா "
"இல்லை சுவாமி.... "
"சரி போய் சரக்கு வாங்கி வா.... அப்டியே ......"
"சுவாமி உங்க விருப்பபடியே செஞ்சுடறேன் சுவாமி, ஒரு சந்தேகம் ..... கேக்கலாமா"
"கேட்டு தொலை"
"சுவாமி ஒரு காலத்தில பேருச்சம் பழம் வித்துடிருந்த நீங்க இன்னிக்கி காவிங்கற வேடமிட்டு பல பெற நம்ப வெச்சு,பொய் அருள்வாக்கு ,உத்தரவாதம் , மோக்ஷம் அது இதுன்னு ஏமாத்தரிங்கலே
.... தப்பு பண்றோம்னு என்னிக்காவது உங்களுக்கு மனசு உருத்திருக்கா சுவாமி?"
"மடையா..... ஒன்னு தெரிஞ்சுக்க இந்த உலகமே ஒரு வியாபார உலகம் அடுத்தவன் நம்பிகைய வெச்சு தான் பிசினஸ் ......,
சோப்பு விக்றவன் இந்த சோப்பு வாங்கினா நீ அழகாகிகுடுவனு சொல்றத நம்பி எத்தன பெண்கள் வாங்குறாங்க .... அத்தனை பெரும் என்ன உலக அழகியாவா ஆகுறாங்க , ஆரோக்கிய சோப்ங்கறாங்க அவங்களுக்கெல்லாம் வியாதியே வர்றதில்லையா,
சினிமா வர்த்தகத்த எடுத்துக்க ...........................................................சினிமா இல்லன்னா உலகமே ஸ்தம்பிசிடும்னு மாய தோற்றத்த ஏற்படுத்தி அது சார்ந்த தொழிலகள பெருக்கிகிட்டே இருக்காங்க ,இவ்வளவு ஏன் சினிமால குத்துப்பட்டு கவர்ச்சி ஏன் வெக்கிரன்னு கேட்டா மக்கள் விரும்பறாங்கனு ஒரு கதை என்ன சர்வே reporta வெச்சிருக்கான் .....மன உறுத்தல் இல்லாத பொய்கள் , ...அரசியல் வர்த்தகமா சொல்லவேண்டியதே இல்லை ..... இப்படி எல்லா வர்த்தக உலகமும் பொய் நம்பிகைகள வெச்சு தான் வியாபாரம் நடத்திடிருக்கு ...... நம்பறவன் பணம் செலவழிகறான், யோசிகிரவன் தப்புறான் ..... அவ்ளோதான் மேட்டர் பிசிநேஸ்ல பாவம் மனசாட்சி எதுவும் கிடையாது பார்த்தா லாபம் கிடைக்காது புரிஞ்சிதா ராசா .....

சீடன் மனதுக்குள் நினைத்துகொண்டான் "இந்த மாதிரி ஆளுங்கள வீடியோ எடுத்தா கூட வீடியோ rights கேட்டு லாபம் பார்ப்பாங்க ...... ஒன்னு கடவுள் இவங்கள தண்டிக்கணும் இல்லை மக்கள் திருந்தனும்,......... சரி சீக்கிரமே நாம ஒரு பிசினஸ் unit ஆசிரமம ஆரம்பிக்கணும், சுய தொழில் லோன் கேட்டு பாங்க்ல apply பண்ணி பார்க்கலாமா?........;...